search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுர்ணமி கிரிவலம்"

    • புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை நிறைவடைகிறது
    • கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்கு தினமும் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 30 -ந் தேதி(புதன்கிழமை) காலை 10.45 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி(வியாழக்கிழமை)காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் புதன்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இவர்களை போன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வழிபடுகின்றனர். ஆனி மாத பவுர்ணமி என்பது வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குவதால், தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கணித்துள்ளனர்.

    இதையொட்டி, அருணாசலேஸ்வரர் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி தெற்கு ரெயில்வே துறை சார்பில் சென்னை கடற்கரை-வேலூர் மெமு ரெயில், தாம்பரம்-விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • 1600 சிறப்பு பஸ்கள்-4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து
    • 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த வருடம் சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந்தேதி இரவு தொடங்கி 5-ந்தேதி இரவு நிறைவடைகிறது.

    சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி, ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர், இந்த ஆண்டு முதல் கிழக்கு ராஜ கோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு, 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

    கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம். பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    14 கி.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று 4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் இருந்து 1600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர விழாவில் பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • நாளை சூரசம்காரம் நடக்கிறது.



    9-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தையொட்டி தயார் நிலையில் உள்ள தேர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெரு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி சுப்ரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில், தங்க குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    பங்குனி பெருவிழாவின் 9-ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பவுர்ணமி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாைதயை வலம் வந்து வழிபாடு செய்தனர்.

    சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நாளை (6-ந் தேதி) சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்கார லீலை நடைபெறுகிறது.

    இதில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 7-ந்தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 8-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருள பெரிய தேரோட்டம் நடைபெறும். தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரிவலப் பாதைகளில் சுற்றி வரும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • இன்று இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் நள்ளிரவு 12.48 மணி வரை உள்ளது
    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்றால் கூடுதல் சிறப்பு என்பதால், அன்றைய நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, தை மாத பவுர்ணமியான இன்று (4-ம் தேதி) இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் (5-ம் தேதி) நள்ளிரவு 12.48 மணி வரை பவுர்ணமி உள்ளது.

    இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரி வலத்தை யொட்டி, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    • அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகிறது
    • கோவில் நிர்வாகத்தினர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.
    • பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது உண்டு.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அந்நாளில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வார்கள்.

    ஒவ்வொரு மாதமும் ஒரு சிலர் இதனை கைவிடாமல் பின்பற்றி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல பஸ், கார்களில் சென்று வருகின்றனர்.

    பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

    வருகிற 13-ந்தேதி கிரிவலம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

    வருகிற 13-ந்தேதி பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

    • திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
    • சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவ–ர்சாமி, அம்பாள், உறசவர் பெரியநாயகி அம்பாள்ஆகியோருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சா மிர்தம் மற்றும் மூலிகை திரவியங்கள், மூலிகை பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும், நேர்த்திகடனுக்காகவும் கிரிவலம் வந்து சாமி தரி சனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை–பெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் பெரிய நாயகி ஊஞ்சலில் எழுந்த ருளி சேவை சாதித்தார் பவுர்ணமி உற்சவதாரர் ஏ. வி. குமரன்மற்றும் சிவனடி யா–ர்கள், சிவதொ–ண்டர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்பர் இல்ல அறக்க–ட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் அர்த்தசாம பூஜை ஆகியவை நடைபெற்றது.

    பவுர்ணமியை முன் னிட்டு பக்தர்களுக்கு மருத்து வம், சுகாதாரம்,குடிநீர், உணவு, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    • திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவண்ணாமலை:

    நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) இரவு 8.20 மணியளவில் தொடங்குகிறது.

    தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் கிரிவலம் நிறைவடைகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவானுக்கும், சாமிக்கும் பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×